Monday 6th of May 2024 05:37:37 PM GMT

LANGUAGE - TAMIL
.
முடிவுக்கு வந்தது குழப்பம்: சி.வி.விக்னேஸ்வரனின் உரை முழுமையாக அவைக்குறிப்பில் சேர்ப்பு!

முடிவுக்கு வந்தது குழப்பம்: சி.வி.விக்னேஸ்வரனின் உரை முழுமையாக அவைக்குறிப்பில் சேர்ப்பு!


இலங்கையின் 9வது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்து ஆற்றிய உரையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை முழுமையாக பாராளுமன்ற அவைக் குறிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

தனது பேச்சை தமிழில் ஆரம்பித்த நீதியரசர் விக்னேஸ்வரன், உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளில் ஒன்றும் இந்த நாட்டின் முதல் சுதேச குடிமக்களின் மொழியுமாகிய எனது தாய் மொழியிலும் ஆரம்பிப்பதாபக குறிப்பிட்டதுடன், குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையுடன் மரபு, பாரம்பரிய உரிமைகளின் அடிப்படையில் தேசம் என்று அங்கீகரிக்கப்படுவதன் பிரகாரம் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடைய வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் உள்ளார்ந்த உரிமைகளை அங்கீகரிப்பதுடன் கடந்த காலம் பற்றிய தவறான வரலாற்று கண்ணோட்டங்களை களைந்தால் மட்டுமே சுதந்திரமும் சமத்துவமும் உதயமாக முடியும் என்று கூறியிருந்தார்.

இந்த பேச்சானது சிங்களத் தரப்பில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதன் பின்னணியில் குறித்த பேச்சை பாராளுமன்ற அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட்டிருந்தது.

இந்நிலையில் எவ்வித நீக்கமும் இன்றி தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை முழுமையாக பாராளுமன்ற அவைக் குறிப்பில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: க.வி.விக்னேஸ்வரன், இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE